கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சாதனைகள், நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.
அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றி செல்வன், தெற்கு மண்டலகுழு தலைவர் தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் வித்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.



