கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் போத்தனூர், சுந்தராபுரம் பகுதியிலுள்ள செங்கோட்டையா மேல்நிலைப்பள்ளியில் ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாம் அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் உதயகுமார், அஸ்லாம்பாஷா, குணசேகரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.



