fbpx
Homeபிற செய்திகள்‘மிக்ஜாம்’ புயல்: நிவாரண பொருட்கள், நிதி - நாமக்கல் ஆட்சியர் உமா நன்றி

‘மிக்ஜாம்’ புயல்: நிவாரண பொருட்கள், நிதி – நாமக்கல் ஆட்சியர் உமா நன்றி

மிக்ஜாம் புயலால் பாதித்தவர் களுக்கு உதவ நிவாரண பொருட் கள், நிதி வழங்கிய அனைவருக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா நன்றி தெரிவித் துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னர், கடந்த வாரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, தொடர்ந்து பெய்துவந்த வரலாறு காணாத மழையால், பாதிக்கப்பட்ட மக் களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ”இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்! அரசோடு கரம் கோத்து சக மனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன்.”

என வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 05.12.2023 அன்று முதல் பெரு நகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14, 15-க்குட்பட்ட புழுதிவாக்கம், திருவொற்றியூர், மணலி, வளசரவாக்கம், தண்டை யார்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஆகிய பகுதிகளுக்கு 10.12.2023 அன்று வரை மொத்தம் 31 கனரக வாகனங்களில் பால் பவுடர், பிஸ்கட், ரொட்டி, அரிசி, சமையல் எண்ணெய், ரவை ஆகிய சமையல் பொருட்கள் மற்றும் பிரட், பாய், போர்வை, கைலி, சோப், துண்டு, தேங்காய் எண்ணெய், நாப்கின், நைட்டி, மெழுகு, தீப் பெட்டி, மெழுகுவர்த்திகள், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட ரூபாய் 1 கோடியே 88 இலட் சத்து 62 ஆயிரத்து 837 மதிப் பீட்டில் அதிகபட்சமான நிவா ரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ள நிவாரண பொருட்களை வாங்குவதற்காக சமூக பொறுப்பு நிதியாக (சி.எஸ்.ஆர்) கிரீன் பார்க் பள்ளி நிறுவனங்களின் சார்பில் ரூ.5.00 இலட்சம், பள்ளிபாளையம் பல் லவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவ னம் சார்பில் ரூ.2.00 இலட்சம், வி.எஸ்.எம் வீவ்ஸ் இந்தியா பி.லிட்., நிறுவனம் சார்பில் ரூ.1.50 இலட்சம், வி.எஸ்.பி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சார்பில் ரூ.1.50 இலட்சம், சிட்டி ஸ்கேப் ஹவுஸிங் & ரிலேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.2.00 இலட்சம், ஜே.பி.பி மில்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.50,000-, வீ.பி.டெக்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.50,000-, மோதி ஸ்பின்னர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.50,000-, லக்கி யார்ன் டெக்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.50,000-, குமரகிரி ஸ்பின்னர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.50,000- என மொத்தம் ரூ.14.50 இலட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

இப்பேரிடர் பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள், அரசு துறைகள் இணைந்து தங்களால் இயன்ற பங்களிப்பை சிறப்பான முறையில் வழங்கியதன் அடிப்படையில் மிக குறுகிய காலத்தில் சென்னைக்கு தேவையான நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இப்பெரும் முயற்சிக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களுக்கும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அவர்களுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பங்களிப்பு செய்த பல்வேறு அமைப்புகளுக்கும், உறுதுணையாக இருந்த அரசு அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள் ளார்.

படிக்க வேண்டும்

spot_img