சேலம் ஹோலி கிராஸ் பள்ளி வைரவிழா ஆண்டின் ‘கலோத்சவ் கிராண்ட் நைட் 2023’ கொண்டாட்டம் பள்ளி விளையாட்டு மைதானத் தில் நடைபெற்றது.
இதில் பள்ளியின் 60 ஆண்டுகால சாத னைகள் குறும்படமாக காட்சிப்படுத்தப்பட்டது.
ஹோலிகிராஸ் மேல்நிலைப் பள்ளி தாளாளரும் முதல்வருமான சேசுராஜ் தலைமை வகித்தார். தலைமை விருந்தினராக சேலம் மறை மாவட்ட ஆயர் ராயப்பன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக சேலம் வடக்கு சட்டமன்ற உறுப் பினர் இரா.ராஜேந்திரன், கவுரவ அழைப்பாளராக விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் ஏ.எஸ்.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவி புகழ் பின்னணிப் பாடகி செல்வி.பூஜா வெங்கட் கலந்து கொண்டார்.
இதில், எமரால்டு வேலி பள்ளி, ஹோலி கிராஸ் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவியரின் நடனம், கிறிஸ்டோபர் எழுதிய ஆங்கில நாடகம் ஆகியவை சிறப்பாக இருந்தது.
விழாவில் பள்ளியின் துணை முதல்வர் பி.எட் வர்டு ஜோசப்பின் 53 ஆண்டுகால கல்வி சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பள்ளி நிர்வாகி யேசுதாசன், ஹோலிகிராஸ் இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் சங்கீதா, ஆசிரி யர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



