Homeபிற செய்திகள்4 நாட்களாக ரத்து செய்யப்பட்ட நீலகிரி மலைரயில் சேவை மீண்டும் துவக்கம்

4 நாட்களாக ரத்து செய்யப்பட்ட நீலகிரி மலைரயில் சேவை மீண்டும் துவக்கம்

நான்கு நாட்களுக்கு பின் னர் மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த மலைரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவரும் இம்மலை ரயில் மழை காலங்களில் இதன் பாதையில் ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடைபட்டு நிற்பதும் இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைவதும் தொடர்கிறது.

கடந்த 3 ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மலைரயில் கடந்து செல்லும் மலைப்பாதையில் கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு தண்டவாள பாதை புதைந்து போனதோடு மரங்களும், பாறைகளும் தண்டவாளத்தில் சரிந்தன.

இதனால் கடந்த 4 ம் தேதி வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் உதகைக்கு புறப்பட வேண்டிய மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து இருபதுக்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் தண்டவாள பாதையில் சரிந்து கிடந்த மண் சரிவுகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற பகுதிகளில் தொடர் மழை காரணமாக பணிகள் தாமதமானதோடு மேலும் சில இடங்களில் சரிவுகள் ஏற்பட்டன.

இதனால் மலைரயில் சேவை அடுத்தடுத்து 5, 6, மற்றும் 7 ம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்து மலைரயிலில் செல்ல ஆர்வமுடன் காத் திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலை யில், நேற்று மாலை சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறை வடைந்ததையடுத்து இன்று காலை வழக்கம் போல் மேட்டுப் பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு சுற்றுலா பயணிகளுடன் மலைரயில் புறப்பட்டு சென்றது.

கனமழையால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக தொடர்ச்சியாக 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலைரயில் இயங்க துவங்கி யதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img