Homeபிற செய்திகள்எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

ஊட்டி இளம் படுகர் நல சங்க அரங்கில் உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதகை நகர வார்டு, உறுப்பினர் சேர்க்கைக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலை மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத், கழக அமைப்புச் செயலாளர் அர்ஜுனன், கூடலூர் சட்டமன்ற உறுப்பி னர் பொன் ஜெயசீலன், முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, மாவட்ட இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், உதகை நகர கழகச் செயலாளர் க.சண்முகம், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் அகிம் பாபு, முன்னாள் அம்மா பேரவை இணை செயலாளர் கல்லக்கொரை பாபு உட்பட மாவட்ட நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணியினர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img