fbpx
Homeபிற செய்திகள்‘ஐஸ் மேக்’ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் அதிகரிப்பு

‘ஐஸ் மேக்’ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் அதிகரிப்பு

புதுமையான குளிர்சாதன தீர்வுகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட குளிர்சாதன கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஐஸ் மேக் ரெப்ரிஜிரேஷன் நிறுவனம் 2023-ம் நிதி ஆண்டில் ஒருங்கிணைந்த லாபம் 184 சதவீதம் அதிகரித்து 20.80 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்நிறுவனம் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் 2023-ல் முடிந்த ஆண்டிற்கான ஒருங்கிணைந்த வருவாய் 206.80 கோடி ரூபாயில் இருந்து 51.50 சத வீதம் அதிகரித்து 313.32 கோடி ரூபாயாகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முடிந்த 4-வது காலாண்டுடன் ஒப்பிடுகையில் மார்ச் 2023-ல் முடிந்த 4வது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபமானது 5.53 கோடி ரூபாயில் இருந்து 56.02 சதவீதம் அதிகரித்து 8.63 கோடி ரூபாயாகவும், மேற்கூறிய காலக்கட்டங்களில் கடந்த ஆண்டு 77.25 கோடியாக இருந்த வருவாய் 47.93 சதவீதம் அதிகரித்து 114.28 கோடி ரூபாயாகவும், ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கிற்கான பலமிழந்த சம்பாத்தியம் 2022-ம் நிதி ஆண்டில் 4.65 உடன் ஒப்பிடுகையில் தற்போது 13.19ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஐஸ் மேக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக் குனர் சந்திரகாந்த் படேல் கூறியதாவது: வருடாந்திர நிகர லாபம் முதல் முறையாக இரட்டை இலக்கத்தை கடந்துள்ளது. ஒருங்கிணைந்த வருவாயும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 2023-ம் நிதி ஆண்டில் எங்கள் ஆண்டு வருவாய் 300 கோடி ரூபாயைத் தாண்டி உள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img