fbpx
Homeபிற செய்திகள்டைனமிக் நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி பற்களுக்கான வேர் கால்கள் சிசிக்சை- சவீதா பல் மருத்துவ மாணவர்...

டைனமிக் நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி பற்களுக்கான வேர் கால்கள் சிசிக்சை- சவீதா பல் மருத்துவ மாணவர் உலக சாதனை

டைனமிக் நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்தி பற்களுக்கான வேர் கால்கள் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சவீதா பல் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த இளங்கலை மாணவர் லிங்கம் சாய் சரண் உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த முறையை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொண்ட முதல் இளங்கலை மாண வர் இவர் ஆவார். இந்த சாதனைக்காக அவர் இந்திய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

பாரம்பரிய பல் மருத்துவம் மற்றும் பல்நோய் சிகிச்சை இணைப் பேராசிரியர் ஹிமா சந்தீப் வழிகாட்டுதலின்படியும், பற்கள் பொருத்துதல் சிகிச்சை மூத்த விரிவுரையாளர் டாக்டர் எஸ். சஹானாவின் கூடுதல் வழிகாட்டுதலின் படியும் இந்த சிகிச்சையை இவர் மேற்கொண்டு சாதனை படைத்திருக்கிறார்.

மறுசீரமைப்பு

முழு வாய் மறுசீரமைப்பு சிகிச்சையை அதாவது பற்களுக்கான வேர் கால்கள் சிகிச்சை மற்றும் பூச்சிகளை அகற்றுதல் உள்ளிட்டவற்றை இந்த மாணவர் நேவிடென்ட் டைனமிக் நேவிகேஷன் சிஸ்டத்தைப் பயன்படுத்தி, முப்பரிமாண வழிமுறையை மேற்கொண்டு செய்துள்ளார்.

நேவிடென்ட் சிஸ்டம் துல்லி யமான சிகிச்சையை உறுதிப்படுத்த கோன் பீம் கம்ப்யூட்டட் டோமோகிராபி தரவுகளுடன் நிகழ்நேர சரிபார்ப்பை கையாள்கிறது.

அந்த மாணவருக்கான சாதனை விருதை சிறப்பு விருந்தினர்கள், சிமாட்ஸ் வேந்தர், நிறுவனர் என்.எம். வீரையன், கல்வியியல் இயக்குநர் டாக்டர் தீபக் நல்லசுவாமி, பதிவாளர் ஷீஜா வர்கீஸ், சவீதா பல் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் அரவிந்த் குமார் ஆகியோர் முன்னிலையில் இந்திய உலக சாதனை புத்தகத்தின் இயக்குநர் டாக்டர் கே. சதாம் உசேன் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img