fbpx
Homeபிற செய்திகள்கொரோனா ரெமெடீஸ் நிறுவனம் பெர்ரிங்க் ஃபார்மாசூடிகல்ஸ் ஒப்பந்தம்

கொரோனா ரெமெடீஸ் நிறுவனம் பெர்ரிங்க் ஃபார்மாசூடிகல்ஸ் ஒப்பந்தம்

கொரோனா ரெமெடீஸ் நிறுவனமும், சுவிட்சர்லாந்து பன்னாட்டு உயிரி மருந்து குழுமமான ஃபெர்ரிங்க் ஃபார்மாசூடிகல்ஸ் நிறுவனமும் செய்து கொண்ட கூட்டாண்மை ஒப்பந்தம் அடிப்படையில், வித்தியாசமான மற்றும் புதுமையான தாய்மார்கள் ஆரோக்கியம் மற்றும் சிறுநீரக மருத்துவப் பொருள்களை வணிகமயமாக்கத் திட்டமிட்டுள்ளன.

கொரோனா மற்றும் ஃபெர்ரிங்க் நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டாண்மை ஒப்பந்தம் இந்தியா முழுவதுமுள்ள நோயாளிகளின் தேவைகளைச் சில பன்னாட்டு பிராண்ட்கள் உள்படப் புதுமையான பொருள் கள் மூலம் நிறைவு செய்யும். இதுவரை கவனிக்கப்படாத தாய்மார்களுக்கான ஆரோக்கியம் மற்றும் சிறுநீரக மருந்துகளும் முக்கியத்துவம் பெறும்.

கொரோனா நிறுவனரும், செயல் இயக்குனருமான நீரவ் மேத்தா கூறியதாவது:
ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு உயிரி மருத்துவக் குழுமத்தின் ஓர் அங்கமான ஃபெர்ரிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உலகத் தரமான மருந்துகளை இந்திய நோயாளிகளுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறோம். ‘அனைவருக்கும் நல்ல சுகாதாரம்’ எனப் பொருள்படும் ‘குட்ஹெல்த்ஃபார்ஆல்’ (GoodHealthForAll) என்னும் எங்களது உறுதிப்பாட்டுக்கு இணக்கமாக இக்கூட்டாண்மை உள்ளது என்றார்.

பெண்கள் சுகாதாரப் பாதுகாப்புப் பொருள்களில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களுள் கொரோனா ஒன்றாகும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நரம்பியல், ஹார்மோன், வலி மேலாண்மை, சருமம், எலும்பு ஆரோக்கியம், அல்சர், ஊட்டச் சத்து ஆகியவற்றுக்கான மருந்துகளிலும் இந்நிறுவனம் வலுவாக உள்ளது.
சிறுநீரகப் பொருள்கள் ஃபெர்ரிங்க் புதிய தொழில்நுட்ப தளத்தில், புதுமையான முறையில், மருந்தளவு சூத்திர முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன

படிக்க வேண்டும்

spot_img