திமுகழக முன்னோடியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான, கோவை மு.ராமநாதனின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மரியாதை செலுத்தினர்.



