fbpx
Homeபிற செய்திகள்பெற்றோருக்கு கோடை விடுமுறையில் கைகொடுக்கும் ‘அலெக்சா’

பெற்றோருக்கு கோடை விடுமுறையில் கைகொடுக்கும் ‘அலெக்சா’

மார்ச் 2023-ல் அமேசானுக்காக கந்தார் நியமித்த ஒரு கணக் கெடுப்பின்படி, 95% க்கும் அதிக மான பெற்றோர் Alexaவை வீட்டில் பயன்படுத்துவது தங்கள் குழந்தைகளின் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்த உதவியதாகத் தெரிவித்து ள்ளனர்.

இந்த கணக்கெடுப்பு 10 நகரங்களைச் சேர்ந்த குழந்தை களுடன் (3-&8 வயது) உள்ள 750-க்கும் மேற்பட்ட பெற் றோர்களிடையே நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களின் ஒரு பகுதியினர் Alexa ஸ்மார்ட் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்துபவர்கள் ஆவர்.

ஏறக்குறைய 96% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கற்றல் மற்றும் வேடிக்கையான செயல்களில் ஈடுபட வைக்க திரையில்லா யோசனைகளைத் தேடுகிறார்கள் என்று கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியது.

இந்த கோடையில் திரைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, 66% பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஆர்வம், கவனம் செலுத்துதல் மற்றும் தகவல் தொடர்பு போன்ற திறன்களை வளர்க்கக்கூடிய குரல் கட்டுப்பாட்டு ஸ்மார்ட் ஸ்பீக்கரை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

“சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் Alexaவின் தீவிரமான பயனர்களாகத் திகழ்கின்றனர். நர்சரி ரைம்கள், ஊடாடும் விளையாட்டுகள், அக்பர் மற்றும் பீர்பலின் கதைகள் முதல் வரலாறு, அறிவியல், பொது அறிவு மற்றும் சொற்களின் வரையறைகள் பற்றிய கேள்விகள் வரை – Alexa வேடிக்கை மற்றும் கற்றலுக்கான சிறந்த ஆதாரமாக உள்ளது” என்கிறார் அமேசான் நிறுவனத்தின் இயக்குநரும், அமேசான் டிவைசஸ் இந்தியாவின்தேசிய மேலாளருமான பராக் குப்தா.

படிக்க வேண்டும்

spot_img