fbpx
Homeபிற செய்திகள்சோழர்களின் அழகியல் வடிவமைப்பில் தனிஷ்க்கின் தங்க நாணயங்கள் அறிமுகம்

சோழர்களின் அழகியல் வடிவமைப்பில் தனிஷ்க்கின் தங்க நாணயங்கள் அறிமுகம்

இந்த ஆண்டு அட்சய திருதியையை ஒட்டி, சோழர்களின் பாரம்பரியம், அழகியலால் ஈர்க்கப்பட்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 4 விதமான புதிய நாணயங்களை தனிஷ்க் அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், நுணுக்கமான கைவினைத்திறன், பிரத்தியேகமான வடிவமைப்பு, உயர்தர மற்றும் உத்தரவாதமிக்க தரம் ஆகியவற்றுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களிடையே நற்பெயர் பெற்றுத் திகழ்கிறது.

240-க்கும் மேற்பட்ட நகரங்களில் 400க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்க ளை தனிஷ்க் கொண்டுள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியையை ஒட்டி, சோழர்களின் பாரம்பரியத்தில் 4 விதமான புதிய நாணயங்களை தனிஷ்க் அறிமுகப்படுத்தியுள்ளது.

அக்கறையும் அன்பும் நிறைந்த சாம்ராஜ்ஜியம், விவேகமும் வீரமுமிக்க போர் வீரனின் உத்வேகம், பண்பாட்டு வளம், பொற்காலத்தின் செழுமை ஆகியவை சோழ வம்சத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாதவை.

ஆழ்ந்த மரபுமிக்க சோழப் பேரரசை கொண்டாடுவது, தெய்வீக பொக்கிஷத்தை போற்றும் நோக்கில் கம்பீரமான ராஜ வம்சத்தின் நாணய தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அறிமுகம்

அதன்படி சிவபெருமானின் நடராஜ வடிவத்தின் ஆழமான ஆன்மீக ஒத்திசைவை மீண்டும் மீட்டெடுக்கும் நடராஜ் நாணயம், சோழ வம்சத்தின் மாபெரும் வெற்றிகளை நினைவுகூரும் வெற்றியின் காரிகை நாணயம், கரந்தை போரில் வெற்றி வாகை சூடி சோழர்களின் வீரத்தையும், துணிச்சலையும் போற்றும் கரந்தை வெற்றி நாணயம், சோழ வம்சத்தின் மிகப் பெரும் பேரரசர்களில் ஒருவராக புகழ்பெற்ற ராஜேந் திர சோழனின் வீரதீரத்தையும், மரபையும் காலம் கடந்து நிலைக்க செய்யும் ராஜேந்திர சோழ நாணயம் ஆகியவை இந்த அட்சய திருதியைக்கு தனிஷ்க் அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்பதிவு செய்வதன் மூலம் தங்க விலை பாதுகாப்பை ஏப்ரல் 30 வரை பெறும் சலுகையையும் தனிஷ்க் அளிக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img