இந்தியாவின் Brides of India 2023 (பிரைட்ஸ் ஆஃப் இந்தியா 2023) மணமகள் பிரச்சார நிகழ்ச்சியின் போது ஆலியா பட் களம் இறங்க உள்ளார்.
10 நாடுகளில் 312 ஷோரூம்களுடன் உலகளவில் 6வது பெரிய நகை சில்லரை விற்பனை நிறுவனமான மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் புதிய விளம்பரத் தூதராக நடிகை ஆலியா பட்டுடன் கையொப்பம் இட்டுள்ளது.
2012 -ல் அவரின் அறிமுகத்துடன் இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறிய ஆலியா பட், பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து உள்ளார். விரைவில் வெளிவர உள்ள ஹாலிவுட் திரைப்படமான ஹார்ட் ஆஃப் ஸ்டோன்-ல் திறமையை வெளிக்காட்டி உள்ளார்.
விளம்பர தூதர்
இந்தியா, UAE, KSA கத்தார் பஹ்ரைன், ஓமன், குவைத், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றில் பிரத்யேக சில்லரை நெட்வொர்க் உடன் ஆலியா பட் உடனான விளம்பர தூதர் ஒப்பந்தம் புதிய உலகளாவிய கண்ணோட்டத்தை வழங்குவதுடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, பங்களாதேஷ், துருக்கி மற்றும் நியுசிலாந்து போன்ற நாடுகளின் புதிய சந்தைகளிலும் விற்பனையை அமைக்கும் எண்ணத்தை விதைக்கிறது.
“மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்” போன்ற உலகளாவிய நிறுவனத்தின் முகமாக மாறுவதற்கு மகிழ்ச்சியடைகிறேன். வெளிநாட்டில் அவர்கள் பெரும் வெற்றி எங்களுக்கான பெருமைக்கான மூலமாக இருக்கும் என்றார் ஆலியா பட்.
இந்தியக் கலை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றின் வெளிப்பாடாக இருக்கும் நகைகளை வடிவமைத்து, விளம்பரப்படுத்தி, விற்பனை செய்வதன் மூலம் உலகின் மிகப்பெரிய நகை விற்பனையாளராக முடிசூட வேண்டும் என்பதே குறிக்கோள் என்றார் மலபார் குழுமத் தலைவர் எம்.பி. அகமது.



