ஐடிசி (மிஜிசி) ஃபுட்ஸ் குழுமத்தின் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க், மிக வும் பிரபலமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸுடன் (CSK) தனது பார்ட்னர்ஷிப் பை அறிவித்துள்ளது. இந்த பார்ட்னர்ஷிப்பின் மூலம் தமிழ்நாட்டின் இரண்டு ‘சூப்பர்’ பிராண்ட்ஸ் – ஃபேன்ஸின் விருப்பமான சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சமீபத்தில் மிகவும் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்ட சூப்பர் மில்க் பிஸ்கட் -ஒன்றிணைகின்றன.
இந்த பிரச்சாரத்தின் மூலம், ஃபேன்ஸ் சாதாரண விசில் போடாமல், ஸ்ட்ராங் மில்க் பிஸ்கட்டை சாப்பிட்டு, தங்களுக்குப் பிடித்த அணிக்கு ‘ஸ்ட்ராங் விசில்’ போட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பார்ட்னர்ஷிப் சரியான தேர்வாகும். ஏனெனில் இந்த சீசனில் நுகர்வோருக்கு முழுமையான அனுபவத்தை வழங்க இரண்டு வலிமையான பிராண்டுகள் ஒன்றிணைகின்றன.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்ட்ராங்கான வெற்றியைப் பெற வாழ்த்துகிறோம் என்று கூறினார் பிஸ்கட் அண்ட் கேக்ஸ் கிளஸ்டர், உணவுப் பிரிவு, ஐடிசி லிமிடெட். தலைமை இயக்க அதிகாரி அலி ஹாரிஸ்.
‘சென்னை சூப்பர் கிங்ஸின் அஃபிசியல் ஸ்ட்ராங் பிஸ்கட் பார்ட்னராக சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க்கை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் என்பது எங்கள் அணியின் மதிப்புகளுடன் எதிரொலிக்கும் ஒரு பிராண்ட் ஆகும்.
ரசிகர்களுக்கு சிறந்த ஸ்னாக்கிங் அனுபவத்தை வழங்க ஒன்றாகச் செயல்பட விரும்புகிறோம்’ என்று கூறினார் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன்.



