பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் அனிஷின் சந்தோஷம் செண் பகம் மண்டல சந்திப்பு விழா கோவை சுந்தராபுரம் லின்டஸ் கார்டன் மண்டபத்தில் நடை பெற்றது.
லயன்ஸ் இயக்கத்தில் சிறப்பாக சேவை செய்வதற்காக மாவட்டத் தலைவரும் மக்கள் தொடர்பு மற்றும் வட்டார தலைவருமான லயன் ச.செந்தில்குமாருக்கு மாவட்ட ஆளுநர் ராம்குமார், பேச்சாளர் சுகிசிவம் ஆகியோர் விருது வாங்கி பாராட்டினர்.
மண்டல தலைவர் அனீஸ் குமார், ருச்சி சச்சின் அனீஸ் குமார் உள்ளிட்ட சுமார் 1000 பேர் பங்கேற்றனர்.
இந்த விழாவை மாவட்ட அமைச்சரவை செயலாளரும் விழா குழுவின் தலைவருமான லயன் ராஜ்மோகன், பதிவு குழு தலைவர் முருகேசன் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சிறப்பாக சேவை செய்ததற்காக பல்வேறு நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்பட்டது.



