fbpx
Homeபிற செய்திகள்சிறு, குறு தொழிலுக்கு ரூ.9000 கோடி பட்ஜெட்டுக்கு கொசிமா வரவேற்பு

சிறு, குறு தொழிலுக்கு ரூ.9000 கோடி பட்ஜெட்டுக்கு கொசிமா வரவேற்பு

மத்திய நிதி நிலை அறிக்கை அறிவிக்கப்பட்ட கடன் உத்தரவாத திட்டத்தில் 9000 கோடி ஒதுக்கியதை கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச்சங்கம் (கொசிமா) வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக கொசிமா தலைவர் நல்ல தம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் உத்தரவாத திட்டத்தில் 9000 கோடி ஒதுக்கீடு, 30 இடங்களில் சர்வதேச திறன் மேன்பாட்டு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும், தனி நபர் வருமான வரி 7 லட்சமாக உயர்வு, விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.20 லட்சம் கோடி, ரயில்வேக்கு 2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு, பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம், உட்கட்ட மைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு ஆகியவற்றை வர வேற்கிறோம்.

சிறு, குறு நிறுவனங்களுக்கு வட்டி குறையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றம் அளிக்கிறது. CLCS மானியம் பற்றிய அறிவிப்பு இல்லை. சிறு, குறு நிறுவனங்களுக்கு 0DCC வரம்பு 25 சதவிகிதம் என்பதை உயர்த்தாதது, சிறு, குறு நிறுவனங்களுக்கு 2% வட்டி மானியம் இல்லாதது போன்றவை ஏமாற்றம் தருகின்றன.
இவ்வாறு நல்லதம்பி தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img