fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா, வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில், வங்கியின் பெண் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து அழகிய வண்ணக் கோலங்களிட்டு பொங்கல் இட்டனர்.
பின்பு சூரிய வழிபாட்டுடன் பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினர்.

இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் கிராமிய கலைஞர்கள் பங்கு பெற்ற தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், பறையாட் டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் சிலம்பாட்ட கலைகள் நடைபெற்றன.

விழா முடிவில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் கிராமிய கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். விழாவில், வங்கியின் பொது மேலாளர்கள், துணைப் பொதுமேலாளர்கள், உதவிப் பொதுமேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

வங்கியின் நிர்வாக இயக்குனர்

விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் பேசுகையில், “வங்கியின் ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த வேளையில் வங்கியும், வங்கியின் ஊழியர்களும் மற்றும் அவர்களது குடும்பமும் மென் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும்.

வங்கியின் ஊழியர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் இந் நன்நாளில் எனது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என் றார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பெயர்பெற்ற பழைய தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியில் தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டி வருகிறது.

இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 511 கிளைகள், 12 மண்டல அலுவகங்களின் மூலம் சுமார் ஐம்பது லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img