கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் நல மையம் பொன்விழா பொங்கல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழா விற்கு வந்திருந்த அனைவ¬ ரயும் மாணவர் அஜய் வரவேற்று பேசினார்.
விழாவுக்கு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் மற்றும் இயக்குனர் டாக்டர் சி. ஏ.வாசுகி தலைமை தாங்கினார். விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் லட்சுமணசாமி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலைமாமணி பேராசிரியர் கு. ஞானசம்பந்தம் கலந்துகொண்டார். அவரது தலைமையில் “இன்றைய இளைஞர்கள் எங்கு இருக்கிறார்கள்” இதயத்திலா? இணையத்திலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
போட்டிகள்
முன்னதாக கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் கோலப்போட்டி, சிலம்பம், ஒயிலாட்டம், கும்மி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாணவிகள் பொங்கல் வைத்து முளைப்பாரி எடுத்து கும்மி அடித்து சிறப்பாக கொண்டாடினார்கள்.
விழாவில் மாணவர் நல மையம் இயக்குனர் முத்துக்குமார்,முனைவர் மதன் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
விழாவில் கோலப்போட்டி மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா முடிவில் மாணவர் நரேஷ்குமார் நன்றி கூறினார்.



