டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும்கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமை தாங்கி பேசும்போது, நாங்கள் வழங்கும் கல்வி ஒழுக்கத்துடன் கூடிய கல்வி ‘உங்கள் வாழ்வின் உயர்விற்கும், தாழ்விற்கும் நீங்களேதான் காரணம்’ என்பதை மனதிற்கொண்டு செயல்பட வேண்டும்.
இக்கல்லூரியிலிருந்து பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர் கள் நல்ல இந்தியக் குடிமகனாக செல்ல வேண்டும் என்றார். கோவை தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.கீதாலட்சுமி பட்டங் களை வழங்கி பேசியதாவது:
பெற்ற பட்டத்தை வைத்து வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்.
கல்வி உயர்வு என்பது மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமையும். நாடு வளர்ச்சி அடைந்தால் உலக அரங்கில் நிச்சயம் வளர்ந்த நாடாக அங்கீகரிக்கப்படும்.
அது நமக்குப் பெருமை தருவதாக அமையும். மாணவர்கள் கற்ற கல்வியைக் கொண்டு தங்களது வாழ்வை வளமாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். நல்ல கல்வியறிவு மனிதனது சிந்தனையை விரிவாக்கும்,வளமாக்கும் என்றார்.
கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்
டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி, கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மருத்துவர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் ஓ.டி. புவனேஷ்வரன், டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. ராஜேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
கல்லூரி முதல்வர் முனைவர் வே.ராஜேந்திரன் பட்டமளிப்பு உறுதிமொழியை வழங்கினார்.
இளங்கலையில் 1995 மாணவர்களும், முதுகலையில் 336 மாணவர்களும், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் ஆக 10 மாணவர்களும் பட்டம் பெற்றனர்.
என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் இயக்குநர் முனைவர் பெ.இரா.முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



