fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில், பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம் - மக்கள் மகிழ்ச்சி

கோவை மாவட்டத்தில், பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம் – மக்கள் மகிழ்ச்சி

தைத்திருநாளை ஒட்டி, தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தை பொறுத்த மட்டில், 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கும், 19 ஆயிரம் இலங்கை தமிழர் குடும்ப அட்டை தாரர்களுக்கும் இன்று முதல் பொங்கல் பரிசு பொருட்கள் வழங் கப்பட்டு வருகின்றது.

பரிசு பொருட்கள்

கோவை பீளமேடு புதூரில் உள்ள நியாய விலைக்கடைகளில், 6 அடி உயர கரும்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் வழங்கினார்.

6 அடி கரும்பு, மற்றும் பொங்கல் பரிசு பொருட்களை வாங்கி செல்லும் குடும்ப தலைவிகள், தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்;- பொங்கல் சிறப்பு தொகுப்பு பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கடந்த காலங்களை போல் இல்லாமல், சிரமம் இன்றி பொருட்களை பெற்று செல்வதாகவும், துண்டு கரும்பும், சரியில்லாத கரும்புகளை பெற்ற எங்களுக்கு இந்த ஆண்டு 6 அடி உயர நல்ல கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், பொங்கல் பொருட்களை பெற்று செல்கிறோம் என்றும், எங்களுக்கு இந்த பொருட்களை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

இந்த பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex Mla, பகுதி கழக செயலாளர் செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img