fbpx
Homeபிற செய்திகள்கோவை பெதஸ்தா மையத்தில் நாளை சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம்- டாக்டர் பால் தினகரன் நற்செய்தி...

கோவை பெதஸ்தா மையத்தில் நாளை சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம்- டாக்டர் பால் தினகரன் நற்செய்தி அளிக்கிறார்

கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள காருண்யா நகரில், பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையத்தில், நாளை (ஜன.8) இயேசு அழைக்கிறார் சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறுகிறது.
நாளை பகல் 1.30 மணிக்கு காருண்யா நகரில் டி.ஜி.எஸ்.கலையரங்கில் இப்பிரார்த்தனைக் கூட்டம் நடக்கிறது.

இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் பால் தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். அருளுரை வழங்கி, சிறப்பு பிரார்த்தனை செய்கின் றனர்.

புதிய ஆண்டின் ஆசீர்வாதத்திற்காவும், வாழ்வின் விஷேசித்த தேவைகளுக்காகவும், நல்வாழ்விற்காவும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்படும்.

மாணவ, மாணவிகளின் சிறப்பு பாடல்களும் இடம் பெறும்.
கூட்டத்தில் ஜாதி, மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

இக்கூட்டங்களில் கலந்து கொள்ள வசதியாக ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் (இயேசு அழைக்கிறார் ஜெபகோ புரம் அருகில்), பீளமேடு, லட்சுமி மில்ஸ் (இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரம் அருகில்), பெதப்பம்பட்டி, கொடுவாய், பல்லடம், பனப் பாளையம், அலங்கியம், பொன்னாவரம், கிணத் துக்கடவு, மதுக்கரை -மரப்பாலம், கோவைப் புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து மதியம் 12 மணிக்கு சிறப்பு பேருந் துகள் ஒழுங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து காருண்யா நகர் செல்வதற்கும், கூட்ட முடிவில் திரும்பிச் செல்வதற்கும் பேருந்து வசதிகள் அதிகாலையில் இருந்து இரவு வரை ஒழுங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிற்றுண்டி சாலைகள், புத்தக சாலைகள் ஆகிய வசதிகள் கூட்ட அரங்கிற்குள் இடம் பெறும். காருண்யா மாணவர் சேர்க்கை பற்றி அறிய ஸ்டால்களும் உண்டு.

படிக்க வேண்டும்

spot_img