fbpx
Homeபிற செய்திகள்அறிவியல், கணிதத்தில் ஆர்வத்தை தூண்ட 205 அரசுப் பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’

அறிவியல், கணிதத்தில் ஆர்வத்தை தூண்ட 205 அரசுப் பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’

தேனி மாவட்டத்தில் அரசுப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 8-ம்‌ வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல்‌ மற்றும்‌ கணிதம்‌ தொடர்பாக, ஆர்வத்தை உண்டாக்கிடும் பொருட்டு துவக்கப்பட்டது “வானவில் மன்றம்”. இதில் 205 பள்ளிகளைச் சேர்ந்த 18,101 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

தமிழகத்திலுள்ள அனைத்து ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்திடும் வகையில், “இல்லம் தேடிக்கல்வி திட்டம்”, ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்திடும் வகையில் “எண்ணும் எழுத்தும்” திட்டம், நாளைய சமுதாயம் வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் அல்லாமல் பல்திறன் வளர்க்கும் கல்வியாக மேம்படுத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு முதல்வரின் கனவுத்திட்டமான “நான் முதல்வன”’ திட்டம், பெண் கல்வியை ஊக்குவித்திடும் பொருட்டு “புதுமைப் பெண்” திட்டத்தினை (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்), அரசுப்பள்ளி ஏழை மாணவ,மாணவிகளின் கல்வியினை ஊக்கப்படுத்திடவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிடவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்த்திடும் பொருட்டு, “முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம்” போன்ற பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அரசுப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 8-ம்‌ வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல்‌ மற்றும்‌ கணிதம்‌ தொடர்பாக, புதியவற்றை அறிந்து கொள்ளும்‌ எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கிடும் பொருட்டு, “எங்கும்‌ அறிவியல், யாவும்‌ கணிதம்” என்பதனை கருத்தில் கொண்டு, முதல்வர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 28.11.2022 அன்று “வானவில் மன்றம்” துவக்கி, வைத்தார்.

அதை தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் “வானவில் மன்றம்” தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பழகுதல், பகிர்தல்

மாணவ, மாணவிகளிடையே இயல்பாகவே உள்ள படைப்பாற்றல்‌ ஆர்வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல்‌ கற்றலுக்கு பயன்படுத்துதல்‌, அறிவியல்‌ கற்பதன்‌ மூலமாக கிடைக்கும்‌ ஆர்வத்தினை தக்க வைத்தல்‌, இந்த ஆர்வத்தின்‌ மூலம்‌ புதுமைகளைக்‌ காணும்‌ மனப்பாங்கினை வளர்த்தெடுத்தல்‌, தாம்‌ பெற்ற அறிவினை தமக்கான மொழியில்‌ பகிர்ந்து அறிவியல்‌ மொழி பழகுதல்‌, அறிவியல்‌ மனப்பான்மையை பரவலாக்குதல்‌, அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணர்தல்‌, சமூகவியல்‌ இலக்கியத்துடனான அறிவியலைப்‌ புரிந்து கொள்ளுதல்‌ ஆகியவை வானவில்‌ மன்றத்தின்‌ முக்கிய நோக்கமாகும்.

அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் 99 அரசு நடுநிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு பயிலும் 725 மாணவர்களும், 639 மாணவிகளும், 7-ம் வகுப்பு பயிலும் 653 மாணவர்களும், 221 மாணவிகளும், 8-ம் வகுப்பு பயிலும் 639 மாணவர்களும், 640 மாணவிகளும் மொத்தம் 3,971 மாணவ, மாணவிகளும், 36 அரசு உயர் நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு பயிலும் 452 மாணவர்களும், 481 மாணவிகளும், 7-ஆம் வகுப்பு பயிலும் 471 மாணவர்களும், 732 மாணவிகளும், 8-ம் வகுப்பு பயிலும் 484 மாணவர்களும், 398 மாணவிகளும் மொத்தம் 2,718 மாணவ, மாணவிகளும் வானவில் மன்றத்தின் மூலம் கல்வி பயின்று வருகின்றனர்.
அதனைப்போன்று, 70 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு பயிலும் 1,720 மாணவர்களும், 2,004 மாணவிகளும், 7-ம் வகுப்பு பயிலும் 1,800 மாணவர்களும், 1,999 மாணவிகளும், 8-ம் வகுப்பு பயிலும் 1,857 மாணவர்களும், 2,032 மாணவிகளும் மொத்தம் 11,412 மாணவ, மாணவிகளும், என மொத்தம் 205 அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு பயிலும் 2,897 மாணவர்களும், 3,178 மாணவிகளும், 7-ம் வகுப்பு பயிலும் 2,924 மாணவர்களும், 2,952 மாணவிகளும், 8-ஆம் வகுப்பு பயிலும் 2,980 மாணவர்களும், 3,070 மாணவிகளும் ஆக மொத்தம் 18,101 மாணவ, மாணவிகள் வானவில் மன்றத்தின் மூலம் கல்வி பயின்று வருகின்றனர்.

“செயல்விளக்கத்தால் எளிதாக புரிகிறது”
தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவன் ஜெ.குருநாத் தெரிவித்ததாவது:
எங்களது பள்ளியில் வானவில் மன்றம் செயல்பட்டு வருவதால் அதற்கென தனிவகுப்பறை, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செயல்விளக்க முறைகள் மூலம் நடத்தி வருவதால், அறிவியல், கணித பாடங்களில் படிப்பதற்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் அமைந்துள்ளது. பள்ளியில் வானவில் மன்றத்தினை செயல்படுத்திய முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

“அச்சாணியாக”
தேனி ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீரெங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவன் கனிஷ்கர் தெரிவித்ததாவது: வானவில் மன்றத்தின் மூலம் தனியாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் செயல் விளக்கங்கள் மூலம் பாடங்களை நடத்துவதால் புரிந்து கொள்ள எளிதாக உள்ளது.

படிப்பினை தூண்டுவதற்கான அச்சாணியாக வானவில் மன்றம் அமைந்துள்ளது. ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்வியை மேம்படுத்துகின்ற வகையில், வானவில் மன்றத்தினை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி என்றார்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் காட்டிய வழியில் செயல்பட்டு வருகிற முதல்வர், ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்வி எந்த ஒரு சூழ்நிலையிலும் தடைபடக்கூடாது என்பதனை கருத்தில் எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி, கல்வி புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்.

இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் செயல்படுத்தாத வகையில் அரசுப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 8-ம்‌ வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகளின் அறிவியல்‌ மற்றும்‌ கணிதம் திறனை மேம்படுத்துகின்ற வகையில் வானவில் மன்றத்தினை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்பதே தேனி மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எழுச்சிமிகு கருத்தாகிறது!

தொகுப்பு:
சு.ஜெகவீரபாண்டியன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
நா.விஜயகுமார்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
தேனி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img