தூத்துக்குடி மாநகராட்சி தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை பள்ளி கல்வித்துறை மற்றும் தேசிய பசுமை படை சார்பில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணி சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கொடியை அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, புனித இஞ்ஞாசியர் பள்ளி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணி கருப்பட்டி சொசைட்டி வழியாக பூபால்ராயர் புரம் மார்க்கெட், குரூஸ்புரம் ரவுண்டானா வழியாக சென்று மீண்டும் சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர் (பொறுப்பு) சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன், சுற்றுச்சூழல் துறை உதவி இயக்குநர் ஹேமந்த் ஜோசன், இளநிலை பொறியாளர் முரளி கண்ணன், ஜெயப் பிரியா, மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி, நகர ஒருங்கிணைப்பாளர் அருள் சகாயம், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் பாவானி மார்ஷ்லின், மெட்டில்டா டேனி, மீனவரணி டேனியல், தலைமையாசிரியர் ரூபினா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



