மெட்ராஸ் ரவுண்டு டேபிள் 1 (MRT1), நடத்திய சென்னை ரன்ஸ் என்ற பெயரிலான சாரிட்டி மாரத் தான் நிகழ்வில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட 6000-க்கும் அதிகமானோர் ஓடினர்.
அடையார் கேன்சர் இன்ஸ்டி டியூட்டில் மகேஷ் நினைவு டிரஸ்ட்டின் குழந்தைகளுக்கான புற்றுநோயியல் சிகிச்சை வார்டுக்கு நிதியுதவி திரட்ட வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு மெட்ராஸ் ரவுண்டு டேபிள் 1 இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சென்னை ரன்ஸ், மாரத்தான் நிகழ்வில் 21 கி.மீ., 10 கி.மீ, 5 கி.மீ. மற்றும் 3 கி.மீ. என்ற நான்கு ரேஸ் வகையினங்கள் இடம்பெற்றன. பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவு உயர்நிலைப்பள்ளி மைதானமே இம்மாரத்தான் நிகழ்வின் தொடக்க அமைவிடமாகவும் மற்றும் நிறைவடையும் அமைவிட மாகவும் இருந்தது.
இந்த மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்க பார்வைத்திறன் பாதிப்புள்ளவர்கள் உட்பட, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட டிருந்தன.
நடிகர்கள் ஆர்ஜே.பாலாஜி, கிருஷ்ணகுமார் ஆகியோர் முறையே 5 கி.மீ. மற்றும் 3 கி.மீ. ஓட்டங்களை தொடங்கி வைத்தனர்.
“யு டூ கேன் ரன்”
“யு டூ கேன் ரன்” என்ற இந்தியாவின் முன்னணி ரேஸ் மேலாண்மை சேவைகள் நிறுவனத்தின் மேலாண்மையின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது. இம்மாரத்தான் ஓட்டங்களில் வெற்றிபெற்ற சாதனையாளர்களுக்குப் பதக்கங்களும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
MRT1-ன் தலைவர் டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறியதாவது:. இந்நிகழ்வின் வழியாக திரட்டப்படும் நிதி, ஏழ்மையான சமூக – பொருளாதார பின்னணிகளைச் சேர்ந்த குழந்தைகள் மத்தியில் புற்றுநோய் பாதிப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிவதற்கும் மற்றும் மகேஷ் மெமோரியல் டிரஸ்டின் குழந்தைகளுக்கான புற்றுநோய் வார்டில் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்றார்.
MRT1 நிதிதிரட்டல் குழுவின் அமைப்பாளர் சிராக் குப்தா பேசுகையில், பல்வேறு அறக்கொடை நிறுவனங்கள் மற்றும் சமூகநல அமைப்புகளுக்காக கடந்த 65 ஆண்டுகளுக்கும் அதிகமாக தொடர்ந்து நிதிதிரட்டி வழங்கி வந்திருக்கிறோம் என்றார்.
சென்னை ரன்ஸ் நிகழ்வின் ஓர் அங்கமாக குழந்தைப்பருவ புற்றுநோய் மீது டிசம்பர் 9, 10 ஆகிய இரு நாட்களில் கண்காட்சி நடத்தப் பட்டது.
மக்களின் பெருமதிப்பை பெற்ற இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் மற்றும் MRT1 – ன் கடந்தகால உறுப்பினரான மறைந்த மகேஷ் மகாதேவன் நினைவைப் போற்றும் வகையில் மகேஷ் மெமோரியல் டிரஸ்ட் நிறுவப்பட்டது.



