கோவை விஞ்ஞானிக்கு லண்டன் வேதியியல் தொழில்முறை அமைப்பு விருது வழங்கப்பட்டது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் பாதுகாப்பு-தொழில்- கல்வி நிறுவன சிறப்பு மையத்தின் இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் முனைவர் கே.கதிர்வேல்.
“பெலோ ஆப் ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி”
அவருக்கு இங்கிலாந்தின் லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி (RSC) அமைப்பானது, அதன் உயரிய விருதான, “பெலோ ஆப் ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி” எனும் விருதினை இந்த ஆண்டு (2022) வழங்கி கௌரவித்துள்ளது.
இந்த அமைப்பானது வேதியியல் துறை சார்ந்த நடவடிக்கைகளுக்காக இயங்கிவரும் பழம்பெரும் நிறுவனமாகும்.
வேதியியல் மற்றும் உயிர் வேதியியல் போன்ற துறைகளில், சமூகத்திற்காக பெரும் பங்களிப்பை செய்த ஆராய்ச்சியாளர்கள் / நிபுணர்களுக்கு இவ்வமைப்பானது மேற்கண்ட விருதினை வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்ததாகும்.



