Homeபிற செய்திகள்வேலூரில் மருத்துவ முகாம்

வேலூரில் மருத்துவ முகாம்

வேலூர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் அமைச்சு பணியாளருக்கான சிறப்பு மருத்துவ முகாம் பிடிஓ அலுவலகத்தில் நடந்தது.
முகாமை வேலூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி அமுதா ஞானசேகரன் துவக்கி வைத்தார்.

இதில் அனைத்து அலுவலர்கள் கள அலுவலர்கள் மற்றும் அமைச்சுப்பணி யாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் சசிகுமார் டாக்டர்கள் இலக்கியா, பிரபாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வில்சன், ரமேஷ்பாபு, ராஜன் பாபு, ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி, காசி, ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியன் ரகு, கீழ் மோனவூர் ஊராட்சி மன்ற தலைவர் லதா பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img