கோவை ஆயுர்வேத பார்மஸி (ஏவிபி) குழுமத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரியும், ஆயுர்வேத தொழிலதிபராகவும் விளங்கிய மறைந்த டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆயுர்வேத அறக்கட்டளை வளாகத்தில் இவ்விழாவை, ‘சமர்ப்பணம் 2022’ என்ற தலைப் பில் நடத்தினர். ‘கல்லீரலில் ஆயுர் வேத மருந்துகளின் பாதுகாப்பு’ என்ற கருத்தரங்கு நடந்தது.
என்சிஐஎஸ்எம், மருத்துவ மதிப்பீடு ரேட்டிங் போர்டு உறுப் பினர் டாக்டர் பி.எஸ்.ஆர்த்தி துவக்கி வைத்தார்.கிருஷ்ணதாஸ் வாரியர் வரவேற்றார்.
ஆர்ய வைத்யா மருந்தகத்தின் நிர்வாக இயக்குநர் தேவிதாஸ் வாரியர் தலைமை தாங்கினார்.
கோட்டக்கல், விபி எஸ்வி ஆயுர்வேத கல்லூரி, கௌமாரபிரித்யா துறைத்தலை வரும், பேராசிரியருமான டாக் டர் கே.எஸ்.தினேஷ், கொல்லம், ஆயுர்வேத மேம்பட்ட ஆராய்ச்சி நடத்தும் அமிர்தா மைய இயக் குநர் டாக்டர் பி.ராம் மனோகர், ஏவிபி ஆராய்ச்சி பவுண்டேசன் இயக்குநர் டாக்டர் சோமித் குமார், பெங்களூரு மருத்துவ மாணவர் டாக்டர் சரின் சிசிகுமார் ஆகியோர் பேசினர்.
இந்நிகழ்வையொட்டி, தேசிய அளவில் நடந்த வினாடி வினா போட்டியில், நாடு முழுவ திலும் உள்ள சுமார் 400 ஆயுர் வேத கல்லூரி மாணவர்கள் பங்கேற் றனர். ஆரம்ப சுற்றுகளில் 42 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
கால் இறுதி மற்றும் அரையிறு தியில் முறையே பதினாறு மற்றும் எட்டு கல்லூரி மாணவர்கள் தகுதி பெற்றனர்.கேரள மாநிலம் ஒல்லூரில் உள்ள வைத்தியரத் தினம் ஆயுர்வேத கல்லூரி டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் நினைவு சுழற்கோப்பையையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசையும் வென்றது.
ஒரிசா கவிராஜ் அனந்த திரி பாதி சர்மா ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல் ரன்னர்-அப் ரொக்கப் பரிசு ரூ. 30,000/- மும், புனே திலக் ஆயுர்வேத மகாவித்யாலயா, 2-வது ரன்னர் அப் ரொக்கப்பரிசு ரூ.20000/-மும், கர்நாடக மாநிலம் ஹாசன், ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கல்லூரி ஆயுர்வேதா மற்றும் மருத்துவமனை, நான்காவது இடத்தைப் பிடித்து, ரூ.10,000/- ரொக்கப் பரிசு பெற்றது.



