சேலத்தில் 10 ரூபாய்க்கு மோடி ஜி தண்ணீர் பாட்டில் விற்பனை துவக்கி வைக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக பிரச் சார பிரிவு மற்றும் வெளியீட்டு பிரிவு மாவட்ட செயலாளர் கோபால் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
10 ரூபாய்க்கு 1 லிட்டர் மோடி ஜி குடிநீர் பாட்டில் விற்பனை கன்னங்குறிச்சி பகுதியில் துவங்கியது. நிகழ்ச்சியில் திரளான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு விற்பனையை துவக்கி வைத்தனர்.
சேலம் மாநகரப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மலிவு விலை குடிநீர் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளதாக பாஜகவினர் தெரி வித்தனர்.