19வது மாநில அளவிலான சப்-ஜூனியர் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் 9, 10, 11, ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் வெங் கடாஜலபதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்தப்போட்டியில் 23 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 450 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கோவை மாவட்டமும் இரண்டாமிடத்தை விருதுநகர் மாவட்டமும் , மூன்றாம் இடத்தை திருநெல்வேலி மாவட்டமும் பெற்றன.
நிறைவு விழாவில் தமிழ்நாடு அமெச்சூர் சங்கத்தின் தலைவர் மயிலை தா.வேலு(மயிலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினர்), அகில உலக சிலம்ப சம்மேளன தலைவர் களரி செல்வராஜ் ஆசான், இந்திய சிலம்ப சம்மேளனப் பொதுச் செயலாளர் ஐரின் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
நிறைவு விழாவில் கற்பகம் நிகர் நிலைப் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் முனைவர் சுதாகர் அனை வரையும் வரவேற்றார்.
இறுதியில் கோவை மாவட்ட சிலம்பம் விளையாட்டுச் சங்கத் தலைவர் செல்வகுமார் நன்றி தெரிவித்தார்.



