கோவை பெரியநாயக் கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா உள் விளையாட்டு அரங்கில் ரோட்டேரியன் டாக்டர் கிருஷ்ணானந்தா நினைவு கோப்பைக்கான தென்னிந்திய அளவில் நடைபெற்ற பாரா வாலிபால் மற்றும் த்ரோ பால் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த வி¬ளாயட்டு போட்டியை கோவை வழக்கறிஞர் எ.கே.எஸ்.என். சுந்தரவடிவேலு தொடங்கி வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பி.சிஐ. தலைவர் எம்.மகாதேவா வீல்சேர் பென்சிங்க பெடரேஷன் ஆப் இந்தியா பொதுச் செயலாளர் சந்திரசேகர் மற்றும் ஆர்.ராமச்சந்திரன், ஆர்.மஞ்சுநாத், ஆர்.எஸ்.மாருதி, சுமித்குமார் பிரசாத், ராகேஷ்குமார் ரங்கா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிசேரியை சேர்ந்த 5 மாநில விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மாலையில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதில் ரோட்டேரியன் சுந்தர வடிவேலு சிறப்பு அழை ப்பாளராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற அனைவரும் பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
விழாவில் ரோட்டரி கிளப் பவுன்டேசன் தலைவர் சுந்தரேசன், செயலாளர் குமரன், பொருளாளர் விக்னேஷ், திட்ட தலைவர் காட்வின், மரியா விஸ்வாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



