fbpx
Homeபிற செய்திகள்தொண்டைக் கட்டியை அகற்ற சிக்கலான அறுவை சிகிச்சை-சென்னை டாக்டர் மேத்தா மருத்துவக்குழு சாதனை

தொண்டைக் கட்டியை அகற்ற சிக்கலான அறுவை சிகிச்சை-சென்னை டாக்டர் மேத்தா மருத்துவக்குழு சாதனை

சென்னையில் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்ந்து வரும் டாக்டர் மேத்தா மருத்துவமனையில், 56 வயது பெண்ணுக்கு கழுத்தின் முன் பகுதியில் இருந்த கட்டியை, டாக்டர்கள் குழு மிகவும் சிக்கலான மற்றும் அரிதான அறுவை சிகிச்சை மூலம் வெற்றி கரமாக அகற்றியது.

கடந்த 18 மாதங்களாக இப்பெண் இந்தப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். வீக்கத்தின் காரணமாக அவரால் உணவை உட்கொள்ள முடியவில்லை.

ஆலோசனை பெற டாக்டர் மேத்தா மருத்துவமனை வந்த அவருக்கு செய்யப்பட்ட சோ தனையில் கழுத்தின் முன்புறம் உணவு விழுங்கும் பகுதியில் 8×7மிமீ அளவு கட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த கட்டியின் மாதிரி சோதனைக்கு அனுப்பியதில், அது சாதாரண கட்டி என்பது தெரிந்தது.

தொடர்ந்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. அப்போது அவரது மார்பில் 94x83x61 மிமீ அடர்த்தியான மென்மையான திசு நிறை, அதாவது கட்டி இருப் பது உறுதி செய்யப்பட்டது.

அனைத்து பரிசோதனைக்குப் பிறகு, அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முதலில் தைராய்டு சுரப்பி நீக்கப்பட்டது. தொடர்ந்து கழுத்தில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. பின்னர் சிறிய ரம்பத்தின் மூலம் மார்பு எலும்பு பகுதி அறுக் கப்பட்டு மார்பில் இருந்த கட்டியும் அகற்றப்பட்டது. அ

றுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது. இதன் காரணமாக நோயாளி ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார்.
இம்மருத்துவமனை டாக்டர் அமிழ்தன் கூறுகையில், நோயாளி நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் பரிசோதனைக்கு மீண்டும் வருவார்.

இந்த கட்டத்தில் வீக்கம் கண்ட றியப்படவில்லை என்றால், கட்டி மேலும் பெரிதாகி இருக்கும். இதன் விளைவாக நோயாளி கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பார்.
உடலில் ஏதேனும் அசா தாரண கட்டி அல்லது அதன் காரணமாக அவர்களுக்கு ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், உடனடியாக டாக்டரை சந்தித்து அது குறித்து ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.

இத்தகைய அறிகுறிகளை புறக்கணிப்பது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். தைராய்டு சுரப்பியின் இடம் பெயர்வு என்பது பொதுவான ஒன்றாகும்.

தைராய்டு செயலிழப்பு அல்லது வீரியமிக்க மாற்றத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால், அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம். அதற்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img