fbpx
Homeபிற செய்திகள்குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு உயரிய சான்றிதழ் வழங்கி கௌரவம்

குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு உயரிய சான்றிதழ் வழங்கி கௌரவம்

இந்திய அளவில் முதல் முறையாக குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு GBCI இந்திய அமைப்பு LEED V4.1 பிளாட்டினம் சான்றிதழ் வழங்கி கௌரவம் செய்துள்ளது

இந்திய நாட்டின் முதன்மையான அதிகாரம் உள்ள நிஙிசிமி, கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்து வமனைக்கு, இயக்கம் மற்றும் பராமரிப்பை அங்கீகரித்து பாராட்டும் வகையில், LEED V4.1 சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளது.

இதன் மூலமாக இந்திய அளவில் மருத்துவத்துறையில் பிளாட்டினம் என் கின்ற உயரிய சான்றிதழை பெற்றுள்ள மருத்துவமனை இந்திய பெருமைகளை குப்புசாமி நாயுடு மருத்துவமனை பெற்றுள்ளது.

அதேபோல பசுமை கட்டிட தரம் மதிப்பீடு முறையில் மேற்பார்வையிட்டு தொழில் முறையிலான நற்சான்றிதழ் மற்றும் புராஜெக்ட் சான்றிதழ் ஆகியவற்றினை வழங்கி வரும்U.S.GREEN BUILDING COUNCIL அங்கமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் நிர்வாக இயக்குனர் கோபாலகிருஷ்ணன் பத்ம நாபன் கூறுகையில், சுற்றுச்சூழலை பாது காப்பதில் குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை ஆக்கப்பூர்வமான பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது.

நிலைத்தன்மையின் தரத்தை உறுதி செய்திடும் வகையில் இன்னும் அதிகமான மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து GBCI இந்தியா பணியாற்ற உள்ளது என்றார். குப்புசாமி நாயுடு நினைவு மருத்துமனை முதன்மை செயல் அதிகாரி ரகுபதி வேலுச்சாமியிடம், கோபாலகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார்.

செயல் தலைவர் பதி கூறுகையில், கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் அசைக்க இயலாத ஆதரவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img