fbpx
Homeபிற செய்திகள்அறுவை சிகிச்சை இல்லாமல் முதியோருக்கு பெருந்தமனி வால்வு மாற்றம்- திருச்சி காவேரி மருத்துவமனை சாதனை

அறுவை சிகிச்சை இல்லாமல் முதியோருக்கு பெருந்தமனி வால்வு மாற்றம்- திருச்சி காவேரி மருத்துவமனை சாதனை

திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் இரு மூத்த குடிமகன்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் பெருந்தமனி வால்வு மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து காவேரி ஆஸ்பத்திரி செயல் இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், இடையீட்டு இதயவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சூரஜ் நரசிம்மன் ஆகியோர் கூறியதாவது:

திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் இரு மூத்த குடிமகன்களுக்கு டிரான்ஸ்கதீட்டர் பெருந்த மனி வால்வு பதிய செயல்முறையை பயன் படுத்தி அறுவை சிகிச்சை இல்லாமல் பெருந்தமனி வால்வு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்ய ப்பட்டுள்ளது.

சுவாசிப்பதில் சிரம பிரச்சினையோடு இருவரும் ஆஸ்பத்திரி வந்தனர். கூடுதலாக இவர்களுக்கு இதய செயல்பாடு தொடர்பான பாதிப்புகள் இருந்தன.
முதல் நபருக்கு அவரது இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் இருந்த அடைப்புகளுக்காக முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

சமீபத்தில் இவருக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டதோடு அவரால் நேராக படுக்க முடியவில்லை. குறுகியி ருக்கும் இதய சுவர் மற்றும் பெருந்தமனி வால்வில் கசிவு என இரு பிரச்சினைகள் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

அவருக்கு திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்யப் பட்டிருந்த காரணத்தால் மீண்டும் திறந்தநிலை அறுவை சிகிச்சை மேற்கொண்டால், உயிருக்கு ஆபத்தாக முடியும். இதனால் டிரான்ஸ்கதீட்டர் பெருந்தமனி வால்வு பதிய செயல்முறை உகந்தது என அறிவுறுத்தப்பட்டது.

அவரது பிரச்சினைக்கு தீர்வு காண பலு£ன் மூலம் விரிவாக்கப்பட்ட ஒரு வால்வு மருத்துவ குழுவினரால் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
இரண்டாவது நபருக்கு தீவிர சுவாச பிரச்சினை இருந்தது.

100 மீட்டர் து£ரம் கூட அவரால் நடக்க முடியாது. பெருந்தமனி வால்வில் கால்சியம் படிமங்கள் சேர்ந்ததன் விளைவாக கடுமையான பெருந்தமனி குழாய் சுருக்கம் ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக பெருந்தமனி வால்வு திறப்பு பாதிக்கப்பட்டு, உடலின் பிற பகுதிக்கு குறைவான ரத்தம் செல்லும். இதயத்தின் பம்பிங் செயல்பாடு 15 சதவீதம் ஆக குறைந்திருந்தது.

அவரது சீறுநீரக செயல்திறனும் குறைந்திருந்தது. திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் உயிரிழப்புக்கு அதிக இடர் வாய்ப்பு உள்ளதால், டிரா ன்ஸ்கதீட்டர் பெருந்தமனி வால்வு பதிய செயல் முறையை பயன்படுத்த முடிவு செய்யப்ப ட்டது.

காலில் மிகச்சிறிய துளையை ஏற்படுத்தி அதன் வழியாக சுயவிரிவாக்கம் செய்து கொள்ளக்கூடிய வால்வை மருத்துவக்குழுவினர் அவருக்கு வெற்றிகரமாக பொருத்தினர். தற்போது அவர் தினமும் எந்த தொந்தரவும் இன்றி மூன்று கிலோமீட்டர் தூரம் வரை நடக்கிறார்.

பெருந்தமனி என்பது ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை முழு உடலுக்கும் எடுத்து செல்லும் மிகப்பெரிய ரத்த நாளமாகும். இடது வெண்ட்ரிக்கள் என்பது இதயத்தின் உந்தி அறையாகும்.

பெருந்தமனி வால்வு என்பது பெருந்தமனிக்கு இதயத்தின் இடது கீழறைக்கும் இடையில் உள்ள வால்வு ஆகும். இந்த உறுப்புகளில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அது மிகவும் ஆபத்தானது. உடனடியாக மருத்துவ இடையீட்டு சிகிச்சை இதற்கு தேவைப்படும்.

இதற்கு முன்பு வரை இத்தகைய பாதிப்பு நிலைகள் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படும் அல்லது வால்வு மாற்றப்படும். இந்த அறுவை சிகிச்சையில் உயிரிழப்புக்கு பெரிய அளவிலான இடர்வாய்ப்பு உள்ளது.

ஆனால் நவீன கண்டு பிடிப்புகள், டிரான் ஸ்கதீட்டர் பெருந்தமனி வால்வு பதிய செயல் முறையை போன்ற புதிய விருப்ப தேர்வுகள் சாத் தியமாகியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட வயதான நபர்களுக்கு மற்றும் பிற உறுப்பு அமைப்புகளில் பிரச்சினை உள்ள அல்லது அறுவை சிகிச்சைக்கு அதிகளவு இடர் வாய்ப்புகள் உள்ள நபர்களுக்கு இந்த வழிமுறை அறிவுறுத்தப்படுகிறது.

எவ்வித வலியும் இல்லாமல் 45 நிமிடங்களுக்குள் டிரான்ஸ்கதீட்டர் பெருந்தமனி வால்வு பதிய செயல்முறையை பயன்ப டுத்தி வால்வு பொருத்த முடியும்.

இந்த செயல்முறை நிறைவடைந்த 6 மணி நேரத்தில் நோயாளியால் எழுந்து நடமாட முடியும். 48 மணி நேரத்துக்கு பிறகு வீடு திரும்பலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின்போது டாக்டர்கள் அரவிந்த்குமார், விஜய்சேகர், கருப்பையா, பிரவின், சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img