fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32-வது மாணவர் மன்றத் தொடக்க விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32-வது மாணவர் மன்றத் தொடக்க விழா

ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32-வது மாண வர்மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா வரவேற்று பேசும்போது, மாணவியர் திறமைகளோடு தலைமைப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பெங்களூரு வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் துணைத்தலைவர் ரம்யா ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, குறிக்கோளைத் தீர்மானிக்க வேண்டியதன் அவசியம், அதற்கான வழிகள் குறித்து எடுத்துரைத்தார்.

மாணவர்மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மன்றப் பொறுப்பாளர்கள் பதவி யேற்றனர். மாணவர் மன்றத் தலைவர் நன்றி கூறினார். கலைநிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைந்தது.

படிக்க வேண்டும்

spot_img