fbpx
Homeபிற செய்திகள்முதல் காலாண்டுக்கான வலுவான செயல்திறனை பதிவு செய்த ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப்

முதல் காலாண்டுக்கான வலுவான செயல்திறனை பதிவு செய்த ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப்

ஐசிஐசிஐ ப்ரூடெ ன்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், 2023-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், புதிய வணிகத்தின் மதிப்பில் Value of New Business (VNB) நிறுவனத்தின் லாபத்தின் அளவீடான31.6% வலுவான நிதிச் செயல் திறனைப் பதிவு செய்துள்ளது.


நிறுவனத்தின் VNB 31.0% மார்ஜின்உடன் 4.71 பில்லியனாக இருந்தது.
ஐசிஐசிஐ புரூடெ ன்ஷியல் லைஃப் இன்சூ ரன்ஸின் எம்டி மற்றும் சிஇஓ என். எஸ். கண்ணன் கூறுகையில், “இந்த காலாண்டில் விஎன்பி 31.6% ஆண்டுக்கு ஆண்டு வலுவான வளர்ச்சியாக ரூ 4.71 பில்லியனாக இருந்தது . இது APE இல் வலுவான 24.7% வளர்ச்சியால் உந்தப்பட்டது.


பிரீமியம் வளர்ச்சி (பிரீமியம் க்ரோத்), பாதுகா ப்பு கவனம் (ப்ரொடெக்ஷன் ஃபோகஸ்), நிலைத்தன்மை மேம்பாடு (பெர்சிஸ்டெண்சி இம்ப்ரூவ் மென்ட்) மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடு (ப்ரொடக்டிவிட்டி என்ஹான்ஸ்மென்ட்) ஆகிய எங்களின் 4P மூலோபாயத்தின்கூறுகளால் வழிநடத்தப்பட்டு, இந்த நிதியாண்டில், நிதியாண்டு 2019 இன் VNB ஐ, இரட்டிப் பாக்குவதற்கான எங்கள் லட்சியத்தை அடைவதற்கான பாதையில் இருக்கிறோம் என்று நம்புகிறோம்.

குறிப்பிடத்தக்க வகையில், பின்தங்கிய வாடிக்கையாளர் பிரிவு களைச் சென்றடைவதற் கானஎங்கள் முயற்சிகள் மற்றும் விநியோகத் தடத்தின் விரிவாக்கம், புதிய வணிக காப்பீட்டுத் தொகை, 2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 25% வளர்ச்சிய டைந்து,நிறுவனத்தின் சந்தைப் பங்கை 15.8% ஆகக் கொண்டு சென்று, சந்தைத் தலைவராக எங்களின்நிலையைத் தக்கவைத்துக் கொள்ள உதவியது.

ஒழுங்குமுறைத் தேவையை விட அதிகமாக உள்ள 203.6% சால் வெண்சி ரேஷியோ உடன் இந்த வாய்ப்பைப் பயன் டுத்திக் கொள்ள நாங்கள் நன்கு நிலை நிறுத்தப்பட்டுள் ளோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img