fbpx
Homeபிற செய்திகள்சிமெட்ஸ் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிமெட்ஸ் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிமெட்ஸ் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங், சவீதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ், சென்னை ராயல் காமன்வெல்த் சொசைட்டி ஆசிய பிராந்தியம் (காமன்வெல்த் இளைஞர் கவுன் சில்) மற்றும் அடாசியஸ் ட்ரீம் குரூப்ஸ் உடன் புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்றம், கூட் டாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் மற்றும் ஆராய்ச்சி முயற்சிகள் போன்றவற்றை இந்த ஒப்பந்தம் எளிதாக்கும்.

இது செல்வாக்குமிக்க உலகளாவிய கொள்கைகளுக்கு பங்களிப்பது மட்டும் அல்லாமல் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய ஷிஷிணின் இளைஞர்களின் பங்கேற்பை முதன்மைப்படுத்தும் என்று சிமெட்ஸ் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் நம்புகிறது.

கையெழுத்திடும் நிகழ்வில், ஷிஷிணி-ன் முதல்வர், ராயல் காமன்வெல்த் சொசைட்டி, மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் அவர்களின் நிலையான வளர்ச்சி சர்வதேச நெட்வொர்க்குகள் மற்றும் 53 உறுப்பு நாடுகளில் ஷிஷிணி-ன் இளைஞர்களை சமூகத்தின் முக்கிய சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு தயார்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

சிமெட்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் தொடர்புகொள்வதற்கும்,உலகளாவிய அளவுகோல்கள் மற்றும் கல்வித்துறையில் சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பை பிரதிபலிக்கும், இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்.இவ்வாறு பல்கலை. தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img