fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் மாநில யோகா போட்டியில் அசத்தல்

ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் மாநில யோகா போட்டியில் அசத்தல்

ஆவாரம் பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மற்றும் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 68 மாணவர்கள், அண்மையில் நடந்த 11-வது மாவட்ட அளவிலான யோகாசன போட்டியில் பங்கேற்றனர்.

அவர்களில் 14 மாணவர்கள் பல பரிசுகளை குவித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மாவட்ட அளவிலான யோகா போட்டிகளை சத்குரு யோக வித்யாலயம் கோவையில் உள்ள கே.எஸ்.ஜி. கலை அறி வியல் கல்லூரியில் நடத்தியது.
கல்லூரி முதல்வர் முனைவர் நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

900 அதிகமான பள்ளி மாணவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து போட்டியில் பங் கேற்றனர்.

அவர்களில் ஸ்ரீ ராமகிருஷ்ணன் மெட்ரிகு லேஷன் மற்றும் உயர் நிலைப் பள்ளியின் 14 மாணவர்கள் பல முக்கிய பரிசுகளை வென்றதுடன் சிறந்த யோகா குழுவிற்கான கோப்பையையும் தட்டிச் சென்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி சார்பில் போட்டியில் பங்கு பெற்ற 68 மாணவர்களையும் பள்ளியின் நிர்வாகக் குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேற்றனர். பள்ளி முதல்வர் ரூபேஷ் குமார் அனைத்து மாணவர்களையும் பாராட்டினார்.

படிக்க வேண்டும்

spot_img