fbpx
Homeபிற செய்திகள்திருச்சியில் இலவச மருத்துவ முகாம்

திருச்சியில் இலவச மருத்துவ முகாம்

இந்திய எலும்பு முறிவு மற்றும் திருச்சி எலும்பு முறிவு மருத்துவர்கள் சங்கம் சார்பில், அகில இந்திய எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு, திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே உள்ள இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மூத்த பேராசிரியர் டாக்டர் மதிவாணன், திருச்சி எலும்பியல் சங்கத் தலைவர் டாக்டர் ஜெய்கிஷ், செயலர் டாக்டர்கள் முகேஷ் மோகன், பரத்குமார், தேவேந்திரன், விஜய செல்வன், சொக்கலிங்கம் உள்ளிட்டோர் எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமில் தேர்வு செய்யப்பட்ட நோயாளிகள் இலவச அறுவை சிகிச்சைக்காக முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பயன் பெறும் வகையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img