கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜேம்ஸ்.
இவர் கால்பந்தாட்ட விளையாட்டில் சிறந்து விளங்கியதால் புலிய குளம் ஜூனியர் கால்பந்தாட்ட கிளப் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயமும்
வழங்கி கவுரவித்தார்கள்.
சான்றிதழ் பெற்ற மாணவனை பள்ளியின் துணை தாளாளர் அருட்பணி ஞானப்பிரகாசம், தலைமையாசிரியை அமலோற்பவ மேரி, உடற்கல்வி ஆசிரியர் ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளும் ,மாணவர்களும் பாராட்டினார்கள்.



