கோவையில் 9-வது படிக்கும் மாணவர் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக கருத்தரங்கு போட்டி களிலும் பங்கேற்று சாதனை புரிந்துள்ளார்.
கோவைப்புதூரில் வசித்து வருபவர் கள் சிவராம், அனுஷா தம்பதியினர். இவர்களுக்கு அர்னவ், நட்சத்திரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களில் அர்னவ் அங்குள்ள சி.எஸ். அகாடமி பள்ளியில் 9-வது வகுப்பும், தங்கை 4-வது வகுப்பும் படித்து வருகிறார்கள்.
5-வது வகுப்பு படிக்கும்போதே கம்ப்யூட்டர் கல்வியில் அர்னவ்வின் ஆர்வத்தை கண்டு, அங்குள்ள ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கு அழைத்து சென்றார்.
அங்கு சோதனை அடிப்படையில், சி,சி++ பயிற்சிக்காக சேர்க்கப்பட்டவர், அவரது ஆர்வம், அறிவு கூர்மை, புரிந்து கொள்ளும் விதம் பயிற்சியாளரை ஆச்சரிய மூட் டியது.
இதையடுத்து அந்த பயிற்சியை முழுமையாக கற்று பட்டய சான்றிதழையும் (Diploma Certificate) பெற்றார் அர்னவ். குறைந்தபட்சம் 6 மாதம் கற்க வேண்டிய இந்த பயிற்சியை மூன்று மாத காலத்திலேயே அர் னவ் நிறைவு செய்தார்.
அடுத்த 4 மாதத்தில் வெப் டெவலப் மெண்ட்(Web Development) பயிற்சியையும், அடுத்த 3 மாதத்தில் ஜாவா(JAVA) பயிற்சியையும், அடுத்த 24 நாட்களிலேயே பைதான், பயிற்சி யையும், நிறைவு செய்து அதற்குரிய பட்டய சான்றிதழையும் பெற்றார். 5-வது வகுப்பு படிக்கும்போதே மேற்கண்ட இரண்டு கம்ப்யூட்டர் பட்டயப் படிப்புகளையும் நிறைவு செய்து சான்றிதழ் பெற்றார்.
அர்னவ் 6-வது வகுப்பு படிக்கும்போது கோவை ஜே.சி.டி. பொறியியல் கல்லூரியில் செயற்கை அறிவாற்றல் அல் லது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறை சம்பந் தமான மாநில அளவிலான கருத்தரங்கு- போட்டி நடந்தது.
தற்போது உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவில் புரட்சி ஏற்பட்டு வருகிறது. “கடந்த கால நிகழ்வுகளைக் கொண்டு எதிர்காலத்தை கணிப்பது, மனித அறிவை எந்திரங்களுக்கு வழங்குவது, எந்திரங்களையே சுயமாக சிந்திக்க வைத்து, எந்திரத்தின் விருப்பப்படி பணியாற்ற வைப் பது (ரோபோ அல்லது எந்திர மனிதன்) ஆகியவை செயற்கை நுண்ணறிவு துறையின் முக்கி யமான செயல்பாடாகும்.
ஜே.சி.டி. கல்லூரியில் நடந்த செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கில் அறிக்கை சமர்ப்பிக்க(Paper Presentation) அனுமதி தருமாறு கல்லூரி நிர்வாகத்தை வேண்டினார் அர்னவ். முதலில் தயங்கிய கல்லூரி நிர்வாகம் அதன்பின் ஒப்புக்கொண்டது.
பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற அந்த போட்டியில் அர்னவ் அறிக்கை சமர்ப்பித்து, அதற்கு பிரமிப்பூட்டும் விளக்கத்தையும் அளித்து, முதல் பரிசு பெற்றார்.
கற்பகம் பொறியியல் கல்லூரி, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, காருண்யா கல்லூரி, குமரகுரு கல்லூரி என பலவற்றில் அறிக்கைகள் சமர்ப்பித்து பாராட் டுகளை பெற்றார் அர்னவ்.
கோவை ஸ்கூல் ஆப் ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் அமைப்பில் இணைந்து உள்ள உலகின் முதல் இளம் வயது (11வயது) மாணவர் என்ற பெய¬ ரயும் பெற்றுள்ளார் அர்னவ்.
இன்போசிஸ் நிறுவனம் இந்திய அளவில் நடத்திய போட்டியில் 7,000-க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். அதில் முதல் 5 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்தார் அர்னவ்.
ஸ்டார்ட் அப் கல்சர் (Srartup Culture) அமைப்பில் உள்ள நிறுவனங்களுக்கு தொ ழில் துறையில் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) பயன்படுத்துவது தொ டர்பாக விளக்கம் அளித்து உள்ளார். கோவை சி.ஐ.டி கல்லூ ரியில் நடந்த கருத்தரங்கில் சிறப்புரையாற்றி உள்ளார்.
அர்னவ் கூறுகையில், டெஸ்லா அதிபர் எலன் மஸ்க்தான் என்னுடைய ரோல் மாடல். அவ ரை போன்று சாதனை படைக்க வேண்டும் என்பதே லட்சியம். விரைவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிறுவனத்தை தொ டங்க உள்ளேன்.
அதன்மூலம் கணிப்பொறி, மென்பொருள், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், வங்கி, நிதி நிறுவனங்கள் போன்ற துறைகளை சார்ந்தவர்களுக்கு உதவ வேண்டும் என்றார்.
மேலும் விவரங்களை www.voicecode.in என்ற அவரது இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.



