கிருஷ்ணகிரி அடுத்த கும்மனூர் கிராமத்தில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவினை மதியழகன் எம்எல்ஏ., துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட கும்மனூர் கிராமத்தில் நேரு யுவகேந்திரா, காந்தி இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.
இந்த விழாவிற்கு கும்மனூர் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பர்கூர் எம்எல்ஏ., மதியழகன் பங்கேற்று, மரக்கன்று நடும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: திப்பனப்பள்ளி பஞ்சாயத்தை பசுமையாக்கும் வகையில், 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளது. மரம் இருந்தால் தான் மழை பொழியும். மழை பொழிந்தால் தான் நிலம் பசுமை பெறும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் காலி நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு, சுத்தமான காற்றுடன் பசுமையான பகுதியாக மாற்ற பாடுபட வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவைப்படும் தென்னங்கன்று, வேப்பம் கன்று உள்ளிட்ட மரக்கன் றுகளை நேரு யுவகேந்திரா மற்றும் வனத்துறையினர் இலவசமாக வழங்குகின் றனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மரக்கன்று களை நட்டு வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் நேரு யுவகேந்திரா, காந்தி இளைஞர் மன்றம் சார்பில் கும்மனூர் பகுதி இளைஞர்களுக்கு, ரூ.4 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், நேரு யுவகே ந்திரா கணக்காளர் அப்துல் காதர், கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ராஜேந்திரன், வனத்துறை அலுவலர்கள் குமார், சக்திவேல், சோமசேகர், வருவாய் ஆய்வாளர் ஜெயபாரதி, கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் மற்றும் காந்தி இளைஞர் மன்ற நிர்வாகிகள் மாதேஷ், ஆலப்பட்டி ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



