fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவிலேயே முதன் முறையாக தர்மபுரி நான்கு ரோட்டில் அதிநவீன போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை- டாக்டர் செந்தில்...

இந்தியாவிலேயே முதன் முறையாக தர்மபுரி நான்கு ரோட்டில் அதிநவீன போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை- டாக்டர் செந்தில் எம்.பி. தகவல்

தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் போக்குவரத்து காவலர்களுக்கான புதிய அதிநவீன கட்டுப்பாட்டு அறை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் துவக்கி வைத்தார்.

இப்பணிகளை துவக்கி வைத்தபின் நாடாளு மன்ற உறுப்பினர் செந் தில் நிருபர்களிடம் கூறியதாவது: கல்ஃப் இன்ஜினியரிங் நிறுவனத்தின் மூலம் 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள, நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய இந்த ஓரடுக்கு கட்டுப்பாட்டு அறையானது முழுக்க முழுக்க சூரிய ஒளியினால் மின் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

போக்குவரத்து காவ லர், கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டே சிக்னல்களை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து வாகன பாதுகாப்பு குறித்தும், போக்குவரத்து விதிகளை அத்து மீறுபவர்கள் குறித் தும் வெளியில் உள்ள காணொளி பலகையில் அறிவிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த காணொளி பலகை மூலம் விளம் பரப்படுத்தப்படும் நிறு வனங்களிடமிருந்து பெறப்படும் தொகையா னது, இந்த கட்டுப்பாட்டு அறையை பராமரிக்கவே பயன்படுத்தப்படும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக் கப்படும் இந்த அதிநவீன கட்டுப்பாட்டு அறை போல, பெரும்பாலான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசி தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து புறக்காவல் நிலை யங்களுக்கும், இந்த வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும், நீட் தேர்வு மையம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது, தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சூழ்நிலையில், நீட் இருக்கும் வரை நமது மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கோ அல்லது வெளி மாவட் டங்களுக்கோ சென்று நீட் தேர்வை எழுத சிர மப்படுவதால், மத்திய அரசுக்கு எழுதிய கடி தத்தின் விளைவாக தர் மபுரியில், தற்போது 8 நீட் தேர்வு மையம் ஏற் படுத்தப்பட்டுள்ளது. இவ் வாறு அவர் கூறினார்.

கல்ஃப் இன்ஜினியரிங் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறும்போது, செங்கல், மணல் போன்ற கட்டு மான பொருட்கள் இல்லாத கட்டமைப்பு என்பதால் மிக குறுகிய காலத்தில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. காவலர்கள் தொடர்ச்சி யாக அயர்ச்சி இல்லா மல் தம் பணியை சிறப்பாக செய்யும் விதமாக நாற்காலி களும், மேசைகளும் வடி வமைக்கப்பட உள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறை அனைத்து பருவகால நிலையிலும் பயன்படும் வகையில் நவீன வடிவமைப்பு கொ ண்டுள்ளதால் காவலர்கள் சிறப்பாக செயல்பட ஏது வாக அமையும் என்று கூறினர்.

இந்நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் அன்பழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சேட்டு, இளைஞர் அணி நிர்வாகிகள் செல்லதுரை, மகேஷ் மற்றும் கவுன்சிலர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img