தமிழ்நாடு காவல்துறை யில் 36 ஆண்டு காலம் பணியாற்றி, பணி நிறைவு செய்த பென்னாகரம் உதவி ஆய்வாளர் காவேரியப் பனுக்கு பிரிவுபச்சார விழா நடந்தது.
தர்மபுரி மாவட்டம் பச்சினம்பட்டி கிராமத்தில், பெருமாள் லட்சுமி தம்ப தியரின் மூத்த மகனாக 1962-ம் ஆண்டு பிறந்தவர் காவேரியப்பன். இவருக்கு இரு தங்கைகள், ஒரு தம்பி.
படிக்கும் காலத்தி லேயே தமிழ்நாடு கா வல்துறை பணியில் பணியாற்ற வேண்டும் என்ற பேரவாவின் கார ணமாக 1986-ம் ஆண்டு தர்மபுரி ஆயுதப்படை காவலராக பணியில் சேர்ந்தார்.
21 ஆண்டுகள் காவல்துறையில் சாதாரண காவலராக நேர்மையாக உழைத்ததின் காரணமாக, கடந்த 2007-ம் ஆண்டு காவல்துறை உதவி ஆ ய்வாளராக பதவி உயர்வு பெற்றார்.
தர்மபுரி ஆயுதப்படை யில் உதவி ஆய்வாளராக பதவியேற்றபின், தர்மபுரி போக்குவரத்து காவல் துறையிலும் கடை சியாக பென்னாகரம் போக்கு வரத்து காவல்துறையில் பணியாற்றி கடந்த ஜூன் 30-ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
இவரின் பணி ஓய்வு பாராட்டு விழா, தர்மபுரி வெண்ணாம்பட்டி ஆயு தப்படை காவல்துறை மண்டபத்தில் நடைபெற் றது.
முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப் பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், காவல்துறை ஏ.டி.எஸ்.பி.க்கள் குணசே கரன், புஷ்பராஜ், காவல் துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை பிரதி நிதிகள் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.



