தூத்துக்குடி மாவட் டம் விளாத்திகுளம் ஊர £ட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மந்திக்குளம், பூசனூர் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட் சியர் மரு.கி.செந்தில் ராஜ் செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.அவர் தெரிவித்ததாவது:
விளாத்திகுளம் ஊரா ட்சி ஒன்றியம் மந்திக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு குளத்தூர் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி விவசாய நீர் பாசன திட்டம்/ நீர் வடி பகுதி மேம்பாட்டின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் 2.70 ஏக்கர் பரப் பளவில் இயற்கை வள மேம்பாட்டு பணியின்கீழ் நடைபெற்று வருகிறது ஊரணி சீரமைக்கும் பணி. இப்பணியை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இப்பணி முடிவடையும்போது 4.80 ஹெக்டேர் பரப்பளவு பாச னங்கள் பயன்பெறும்.
பூசனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிர தம மந்திரி விவசாய நீர் பாசன திட்டம்/ நீர் வடி பகுதி மேம்பாட்டின் கீழ் ரூ.2.86 இலட்சம் மதிப்பில் 0.39 ஏக்கர் பரப்பளவில் தடுப்பணை அமைக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது.
இப்பணி முடிவடையும்போது 2.80 ஹெக்டேர் பரப்பளவு பாச னங்கள் பயன்பெறும்.
வேளாண்மை பொறியி யல் துறையின் சார்பில் மந்திக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கீழ் மந்திக்குளத்தில் காசிநாடா ருக்கு சொந்தமான நிலத் தில் முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1 இலட்சம் மதிப்பில் பண் ணைக்குட்டை அமைக்கும் பணி பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மந்திக்குளம் பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட் டத்தின்கீழ் தரிசு நிலத்தில் நடைபெற்று வரும் திட் டப்பணிகள் ஆய்வு செய் யப்பட்டன.
இப்பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், துணை இயக்குநர்கள் வேளாண்மை, உழவர் பயிற்சி நிலையம்,நுண்ணீர் பாசனம், மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை நாச்சியார், தோட்டக்கலை உதவி இயக்குநர், வேளாண்மை செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஷீலா, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



