ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிக் காக கோவை ஏ.வி.பி. ஆய்வு நிறுவனமும், அவினாசிலிங்கம் பல் கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப் பந்தம் செய்துள்ளன.
ஏ.வி.பி. கூட்ட அரங்கில் மேலாண்மை இயக்குநர் தேவிதாஸ் வாரியார், அவினாசிலிங்கம் பல் கலைக்கழக வேந்தர் எஸ்.பி. தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் பேசும்போது கூறியதாவது: இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன் றிணைந்து ஆராய்ச்சி , கல்வி மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதில் ஈடு பாடு கொண்டு உழைக்க முடிவு செய்துள்ளன.
இந்த ஈடுபாடு, ஆயுர்வேதத்தில் ஆய்வுகூட சோதனை ஆகியவற்றில் ஏதுவாகும். இக்கல்வி ஆய்வு கூட சோதனை ஆகியவற்றில் பட்டப்படிப்பு, உயர்கல்வி, ஆய்வு ஆகியவற்றில் கல்வித்தகுதி பெற ஏதுவாகும்.
இக்கல்வி நிறுவனங்கள் ஒன்றிணைந்து உலக அளவில் கருத்தரங்குகளும், பயிற்சி பட்ட றைகளும் ஏற்பாடு செய்யும். ஆயுர் வேத ஆராய்ச்சிக்கான உலகளாவிய நுழைவாயிலாக கோவையை நிலை நிறுத்தும் பல முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி இருக்கும்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்தப் படிப்புகள் மருத்துவம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன், ரெவெர்ஸ் பார்மகோளஜி, உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து, மருத்துவ ஜவுளி, கல்வி முறை, பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்கள் மற் றும் சமஸ்கிருத நூல்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கான ஆய்வு ஆகியவை குறித்து இணைத்து திட்டமிடப்படும்.
கல்வியில் இந்நிறுவனங்கள் இணைந்து பல்துறை கல்வி நிகழ்முறை, பட்டப்படிப்பு நடைமு றை, உயிரியல் பௌதிகத்தில் ஆய்வு, உயிரியல் ரசாயனம், உயிரியல் கணிதம், பாரம்பரிய மருத்துவம், உயிரியல் விஞ்ஞானம் ஆகியவற்றுக்கான தகவல் தொழில் நுட்பத்தை அமைப்பார்கள்.
ஏ.வி.பி. ஆராய்ச்சி அறக்கட்டளை, அவினாசிலிங்கம் இன்ஸ்டிட்யூட்டின் முக்கிய மையமாகச் செயல்படும், இது மற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் நிரப்பு/ பாரம்பரிய மருத்துவம் தொடர்பான பகுதிகளில் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் கல்வி ஒத்துழைப்புக்கான முத்தரப்பு ஒத்துழைப்புக்காக செயல் படும்.
இவ்விரு நிறுவனங்களும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவர். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார் கள். விழாவில் அவினாசிலிங்கம் பல்க லைக்கழக துணைவேந்தர் டாக்டர் பாரதி ஹரிசங்கர், அவினா சிலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் எஸ்.கவுசல்யா, ஏ.வி.பி. ஆராய்ச்சி நிலைய துணை இயக்குநர் சுஜித் எர்னேசத் மற்றும் டாக்டர் சோமித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.



