கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் விவசாயிகளின் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்துவதாக கூறி, விவ சாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவராயபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை யொட்டிய தேவராயபுரம் ,நரசி புரம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதி களில் கடந்த ஒரு மாதமாக 10 க்கு மேற் பட்ட யானைகள் தொடர்ந்து இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருவதாகவும் ,இதற்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வில்லை எனக்கூறியும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து செய்யாததைக் கண் டித்தும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் விவசாயிகள் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என் றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.



