fbpx
Homeபிற செய்திகள்ஆஸ்துமாவுக்கு புதிய மருந்து : க்ளென்மார்க் நிறுவனம் அறிமுகம்

ஆஸ்துமாவுக்கு புதிய மருந்து : க்ளென்மார்க் நிறுவனம் அறிமுகம்

உலக அளவில் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும், க்ளென்மார்க் என்னும் க்ளென்மார்க் பார்மசூடிகல்ஸ் நிறுவனம், ஆஸ்துமா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்காக புதிய இண்டகாடெரோல் மற்றும் மொமடசோன் என்னும் கூட்டு மருந்தான இன்டாமெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இண்டகாடெரோல் 150 எம்சிஜி உடன் மொமடசோன் 80எம்சிஜி, 160எம்சிஜி, 320எம்சிஜி ஆகிய 3 அளவுகளில் கிடைக்கிறது.

புதிய மருந்து குறித்து க்ளென்மார்க் பார்மசூடிகல்ஸ், இந்தியா பார்முலேஷன்ஸ் பிரிவு தலைவரும், இக்குழுமத்தின் துணைத் தலைவருமான அலோக் மாலிக் கூறுகையில், இன்டாமெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இதுபோன்ற மருந்து இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு இல்லாத வகையில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் இளம்பருவத்தினருக்கு உலகத்தரம் வாய்ந்த குறைந்த விலையில் மருந்துகளை எங்கள் நிறுவனம் வழங்கி வருகிறது என்றார்.

இந்நிறுவனம் இந்தியாவில் இண்டகாடெரோல் இன்கேலரின் புதுமையான எப்டிசி-ஐ சந்தைப்படுத்தியதோடு, மூச்சுக்குழாய் தசை இறுக்கத்தை தளர்வடைச் செய்யும் நீண்ட நேரம் செயல்படும் கார்டிகோஸ்டீராய்டை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் ஆகும். இவை இந்திய மருந்து கட்டுப்பாட்டு சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்துமா என்பது ஒரு பெரிய தொற்றாத நோயாகும். இது நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப்பாதைகளின் வீக்கம் மற்றும் குறுகலால் ஏற்படுகிறது. இது வயது வித்தியாசமின்றி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரையும் பாதிக்கிறது.

இன்ஸ்டிடியூட் பார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் இவாலுவேஷன் அமைப்பின் ‘நோயின் உலகளாவிய பாதிப்பு’அறிக்கையின்படி, உலக அளவில் உள்ள ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களை ஒப்பிடும்போது இங்கு 3 மடங்கு இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் பாரம்பரிய சிகிச்சை பெறும் மொத்த ஆஸ்துமா நோயாளிகளில், 49 சதவீதம் பேருக்கு கட்டுப்பாடு இல்லாத நோய் பாதிப்பு உள்ளது.

அதேசமயம் இன்டாமெட் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, கட்டுப்பாடற்ற ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நோயின் தீவிரத்தையும் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img