fbpx
Homeபிற செய்திகள்ஆடு வளர்க்க அனுமதி தாருங்கள்- திருநங்கை மனு

ஆடு வளர்க்க அனுமதி தாருங்கள்- திருநங்கை மனு

பொது இடத்தில் ஆடு வளர்க்க பஞ்சாயத்தில் அனுமதி வழங்கவில்லை என்று கூறி சூலூரை சேர்ந்த திருநங்கை ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

சூலூரை அடுத்த மயிலம்பட்டியை சேர்ந்த ஏஞ்சல் என்ற திருநங்கை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

மயிலம்பட்டியில் கடந்த 10 ஆண்டு களாக வசித்து வருகிறேன். 15 ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறேன். ஒரு பொது இடத்தில் கொட்டகை அமைத்து ஆடு வளர்த்து வந்தேன்.

ஆனால் பஞ்சாயத்தில் கேட்டுவிட்டுதான் ஆடு வளர்க்க வேண்டும் என்று கூறி எனது கொட்டகையை அப்புறப்படுத்தி விட் டனர்.

நான் கடன் கேட்டு நிற்கவில்லை. சொந்தத் தொழில் செய்கிறேன் அதற்கும் அனுமதி கொடுக்காமல் என்னை அலைக்கழிக்கிறார்கள்.

எனக்கு சொந்த தொழில் செய்ய உதவாவிட்டாலும், தொந்தரவு செய்யா மல் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்

படிக்க வேண்டும்

spot_img