fbpx
Homeபிற செய்திகள்பருவ நிலை மாற்றத்திற்கு எதிராக போராட டாடா டீ துவக்கிய ‘ஜகோ ரே’ புதிய இயக்கம்

பருவ நிலை மாற்றத்திற்கு எதிராக போராட டாடா டீ துவக்கிய ‘ஜகோ ரே’ புதிய இயக்கம்

உலகின் தட்ப வெப்பநிலை காலநிலை மாற்றம் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்த டாடா டீ ஜகோரே #ஜகோ ரே என்ற புதிய பதிப்பை துவக்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக காலநிலை பெருமளவில் மாற் றம் பெற்றுள்ளது. அதிக வெள் ளம், வெப்ப நிலை உயர்வு, வறட்சி போன்றவற்றை எதிர் கொண் டுள்ளோம். ஒரு லட்சத்துக் கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல நிதியகம் (யுனிசெப்) தெரிவித்துள் ளது.

டாடா டீ துவக்கியுள்ள #ஜகோ ரே, இயக்கமானது, எதிர்கால தலைமுறையினர் எவ் வாறு காலநிலை மாற்றத்தால் பாதிக்கப் படுகின்றனர் என்பதை விளக்குகிறது. மக்களிடையே சிறு மாற்றத்தை ஏற்படுத்தி, சுற்றுச் சூழலை பாது காக்க முடியும் என்பதை விளக் குகிறது.

டாடா டீயின் 15-வது ஆண்டினை முன்னிட்டு புதிய டிவிசி தளத்தில் நடிகர் பங்கஜ் திரிவேதியின் உதவி யுடன், முலன் லிண்டாஸ், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வடிவமைத்துள்ளார்.

இத்தகைய முயற்சி குறித்து, இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் குளிர்பான பிரிவு தலைவர் புனித் தாஸ் கூறுகையில், “டாடா டீயின் ‘ஜகோ ரே’, சமுதாயத்தில் சொற்களால் மட்டுமின்றி, செயலாலும் மேற் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொதுமக்களிடையே மாற்றத்தை கொண்டு வர முயன்று வருகிறது. குழந்தைகளின் எதிர் காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற பெற்றோர்களிடையே விழிப்புணர்வை மேற்கொள்கிறது. நிலையான ஆற்றல் முறைகள், பொருட்களை மறுசுழற்சி செய்தல், அதற்கான பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுதல் இவற்றில் அடங்கும்,” என்றார்.

முலன் லிண்டாஸ் தலைமை செயல் அதிகாரி கரிமா கந்தல்வால் கூறுகையில், “ஜகோ ரே கடந்த 15 ஆண்டுகளாக நடிகர் பங்கஜ் திரிபாதியுடன் குழந்தைகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு இதை உருவாக்கியுள்ளார். புவியில் ஏற்படும் தட்பவெப்ப பருவநிலை மாற்றத்தை எடுத்துச் சொல்லும் விதமாக இது அமைந்துள்ளது,” என்றார்.

விபரங்கள் அறிய www.jaagore.com என்ற இணையதளத்தை பார்வையிட்டு, உறுதி ஏற்போம்.

படிக்க வேண்டும்

spot_img