கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் ஆண்டு விழா “இன்ஸ்பயர-2022” ஜூன் 3 (நேற்று) காலை 10 மணியளவில் கலாம் அரங்கத் தில் நடைபெற்றது.
இதில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. துறைவாரியாக சிறந்து விளங்கிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
மாணவர்களின் தனித் திறமைகளை ஊக்குவிக்கும் வித மாக பல்வேறு போட் டிகள் நடத்தப்பட்டு, சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் அறங்காவலர் சரசுவதி கண் ணையன் மற்றும் இணை செயலாளர் பிரியா சதீஷ் பிரபு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் ஜெயா வரவேற்புரை ஆற்றி ஆண்டறிக்கை வாசித் தார். கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி கருணாகரன் மற்றும் டீன் மகுடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண் டனர். இவ்விழாவில் சுமார் 5000 மாணவர்கள், அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொ ண்டனர்.
முனைவர் அனந்தமூர்த்தி, முனைவர் சரவணசுந்தரம் மேற் பார்வையில் கல்லூரி ஆண்டு விழா “இன்ஸ்பயர் – 2022” சிறப்பாக நடைபெற்றது.



